http://www.thiripurasundariammantemple.thirukalukundram.in/

Thirukalukundram.in

Thirukalukundram.in

ருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுரை அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் -திருக்கழுக்குன்றம்







Arulmigu Vedhagiriswarar Temple - Thirukalukundram


இறைவர் : அருள்மிகு வேதகிரிஸ்வரர்  

இறைவி : அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்

இறைவர் : அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் (தாழக்கோவில்)

தல மரம் : வாழை மரம் (கதலி)

தீர்த்தம் : சங்குத் தீர்த்தம்



http://www.thiripurasundariammantemple.thirukalukundram.in/

அருள்மிகு வேதகிரீஸ்வரர்-திரிபுரசுந்தரி அம்மன் லட்சதீப திருவிழா








அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில்-இலட்சதீபவிழா
Arulmigu Vedhagiriswarar Temple-Sangutheertha Pushkaramela


செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம்(thirukalukundram) அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் (thiripurasundari)உடனுரை அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் (vedhagiriswarar) கன்னிராசிக்குரிய (kanni raasi) பரிகார ஸ்தலமாகும்.இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு பகவான் கன்னிராசியில் பிரவேசித்த நாளான 02-8-2016 அன்று காலை 9.35 மணியளவில் அஸ்தராயர் சங்கு தீர்த்த குளத்தில் எழுந்தருளினார். இதற்கான பூஜைகள் 31-07-2016 அன்று சங்கு தீர்த்த குளக்கரை (sangutheertham)எதிரே அமைக்கபட்ட மண்டபத்தில் துவங்கியது.ஒரு யாக சாலையுடன் கங்கைக்கு ஒரு கலசம் மற்றும் நவகலசங்களுடன் 27 பரிவார கலசங்களை கொண்டு கனபதிஹோமம் ,நவகிரக ஹோமம்,லட்சுமி ஹோமத்துடன் துவங்கி கங்கா தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.    க்கலசங்களில் கங்கை,சரஸ்வதி,கோதவரி,நர்மதா,மானசரோவர்,ராமேஸ்வரம்,ஹரித்துவார்,முதலான புண்ணிய ஷேத்திரங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தத்தை கும்பத்தில் ஆவாஹனம் செய்யப்பட்டு பூஜைகள்,ஹோமங்கள்,வேள்விகள்,செய்து மகாபூர்னாஹீதியுடன் முடிவுற்றது.தொடர்ந்து காலை 9.30 மனிக்கு சங்கு தீர்த்த (sangutheertham) குளக்கரையில் எழுந்தருளிய அஸ்த்தராயருக்கு கலசங்களில் இருந்த புனித நீரை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.சங்கு தீர்த்த குளக்கரையில் எழுந்தருளிய பஞ்ச மூர்த்திகளான விநாயகர்,வேதகிரீஸ்வரர்,திரிபுரசுந்தரி அம்மன்,முருகருடன் வள்ளி தெய்வயானி,சண்டிகேஸ்வரர் தீர்த்தவாரி நடைபெற்றது.